Friday, October 22, 2010

ஜாக்கி சேகருக்கு ஒரு கடிதம்



நான் கடந்த 6 மாத காலமாக பதிவுலகின் வாசகனாக இருந்து வருகிறேன். உங்கள் பதிவுகளை பலமுறைப் படித்திருக்கிறேன். திரைத்துரையில் இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு இந்த கவர்ச்சி (ஆபாசம்) எழுத்திலும் இருக்கிறது என நினைத்துக் கொண்டதுண்டு.

இப்போது நீங்கள் கிழிக்கப் படுவது குறித்து கோபப் பட்டிருக்கிறீர்கள. உங்கள் பதிவில் வெளியிடப்படும் கவர்ச்சிப் படங்களுக்கு நீங்கள் தந்த விளக்கம் இது.

//ஏம்பா தினமும் என் பிளாக்ல்  இது போலான படத்தை டெய்லி கீழ போடறேனே அதை பார்க்கலையா??? அந்த படங்கள் யாரையும் வற்புறுத்தி எடுத்தது அல்ல அவர்கள் அவர்கள்  தொழிலுக்கு கொடுக்கும் புரமோஷன் படங்கள் அவைகள்.//

அவங்க புரோமசன் பண்றதாவே இருக்கட்டும். அதை ஏன் உங்க வ்லைப்பூவுல போடுறீங்க? விபச்சாரிங்க கூடத்தான் தொழிலுக்காக போஸ் கொடுக்குறாங்க. அதுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம். அதை போட்டு புரமோட் பண்ணுற உங்களுக்கு என்ன பெயர்?

//ஆனால் இரண்டு  வருடம் கடந்த இப்போது என் மீது கற்கள் வீசபடுகின்றன... எனது உருவம் கேலிக்குள்ளாக்க படுகின்றது...நான் வெளிப்படையாக எனது எழுத்து பிழைகளை ஒத்துக்கொண்ட பிறகும் எனது எழுத்து பிழை நையான்டி செய்யபடுகின்றது... எனது 730 பாலோயர்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகின்றார்கள்...//

உங்களைத் தாக்கி எழுதப் பட்ட பதிவுகளில் இந்த விடயங்களை நானும் கவனித்தேன். ஆனால் அவர்கள் உங்களைத் தாக்கி எழுதிய காரணம் உங்கள் எழுத்தில் கலக்கும் ஆபாசம். அது பற்றி எதுவும் பேசாமல் இந்த கேலிகளை வைத்து ஆதரவு தேடப் பார்க்கிறீர்கள்.

அப்புறம் ஒரு கேள்வி இந்த ஆபாசங்கள் உங்கள் பதிவுகளில் வேண்டுமென்றே திணிக்கப் படுபவையா? அல்லது அதுவாகவே வந்து விடுகிறதா? கடந்து போகும் பெண்களின் அங்கங்களை உங்கள் தளத்தில் விவரிக்கும் நீங்கள் உங்கள் உருவம் கேலி செய்யப் படுவது குறித்து வருத்தப் படுவது வேடிக்கையாக இருக்கிறது.

பி.கு: தலையில முடியே இல்லைன்னாலும் கடைக்கு வர கஸ்டமர்டா அவுரு. அவுருக்கு போயி இப்புடி ஒரு லெட்டர எழுதிட்டியேடா!

2 comments:

Anonymous said...

gdvgtvj hjhhdik ujuki

vjygjyt vyjfffbnffh ghf

Anonymous said...

ஐயோ பாவம்

Post a Comment