Friday, December 24, 2010

கேபிள் சங்கரும் தல தளபதியும்பதிவுலக யூத்து, புலமைப் பித்தன், எதிர்கால இயக்குனர் கேபிள் சங்கருடன் ஒரு பேட்டி.

தல தளபதி: வணக்கம் மக்கா! ஒரு வெட்டியான விவாத நிகழ்ச்சிக்கு வேல வெட்டியெல்லாம் விட்டுப் போட்டு கேபிள் சங்கர் இங்க வந்துருக்காரு (பதிவெழுதுறதெல்லாம் ஒரு வேலையா?). வாங்க கேபிள் சங்கர். அதென்ன கேபிள் சங்கர்? கனக்சன் குடுத்தாதான் பேசுவீங்களா?

கேபிள் சங்கர்: நான் சைதாப்பேட்டையில கேபிள் டி.வி ஓனர்.

தல தளபதி: ஆமாம் பெரிய ரிலையன்ஸ் ஓனர். மக்கிப் போன ஒயர மாத்தாம, கேபிள் தெரியலன்னா கண்டுக்காம மாசா மாசம் பணத்த மட்டும் புடுங்கற வேலைக்கு ஓனர்னு பேரு வேற.

கேபிள் சங்கர்: அதெல்லாம் இந்த சன் டேரக்ட் மாதிரி ஆளுங்க செஞ்ச குளோபல் மார்க்கெட்டிங்கால வந்த பிரச்சினை. அவங்களால எங்க பிஸினஸ் பாதிச்சிருச்சி.

தல தளபதி: யோவ் சினிமாவ மட்டும் எப்புடி மார்க்கெட்டிங் செய்யறது, செஞ்சாங்கன்னு சொல்லி "சினிமா வியாபம்" பண்ற நீ மார்க்கெட்டிங்க தப்பாப் பேசுறியா? சரி நீங்க பதிவெழுதுறதோட நோக்கம் என்ன?

கேபிள் சங்கர்: மக்களுக்கு திரைப் படங்களைப் பத்தி ஒரு புரிதல் ஏற்படுத்தி இந்தியாவ முன்னேத்தனும்.

தல தளபதி: ஓ சினிமா பத்திப் புரிதல் வந்தா இந்தியா முன்னேறிடுமா? என்னா ஒரு கண்டு பிடிப்பு. நீங்க ஒரு வில்லேஜ் விஞானி பாஸ்.

கேபிள் சங்கர்: ராத்திரி பகலா ஷீட்டிங் போகுது. அந்த பிஸியிலயும் நான் இங்க வந்துருக்கேன். கேள்வியக் கேளுங்க.

தல தளபதி: நீங்க நெறையா சாப்புடுவீங்களா?

கேபிள் சங்கர்: ஏன் என்னையப் பாத்தாத் தெரியலையா உங்களுக்கு?

தல தளபதி. ம் நல்லா தெரியுதுண்ணே! இல்ல நீங்க எழுதுற சாப்பாட்டுக் கடை விளம்பரம்லாம் காச வாங்கிட்டு எழுதுறீங்கன்னு பேசிக்கிறாங்களே!

கேபிள் சங்கர்: அது யாரோ விஷமிகள் கெளப்பிவிட்ட வதந்தி.

தல தளபதி: யோவ் வதந்தியும் இல்ல வாந்தியும் இல்ல. நீ சொன்னன்னு சொல்லி திருவான்மியூர்ல ஒரு கடைல போய் சாப்பிட்டேன். சரக்கடிச்ச மாதிரி ரெண்டு நாளைக்கு மப்பு தெளியிலய்யா.

கேபிள் சங்கர்:தம்பி அதப் பத்தி நாம பேட்டி முடிஞ்சதுக்கப்பறம் பேசிக்குவோம். அடுத்தக் கேள்வி?

தல தளபதி: நீங்க பதிவர் சந்திப்பு புத்தக வெளியீடெல்லாம் நடத்துறதே ஒன்னா சேந்து சரக்கடிக்கத்தான்னு ஊருக்குள்ளப் பேசிக்கிறாங்களே! அது உண்மையா?

கேபிள் சங்கர்: உங்களுக்கு யாரோ தப்பான தகவல் குடுத்துருக்காங்க. சந்திப்புக்கு வர எல்லாரும் சேந்து அடிக்க மாட்டோம். நாங்க ஒரு நாலு பேர் இருக்கோம். ஒன்னா சேந்து சரக்கடிக்க ப்ளான் பண்ணும் போது ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிருவோம்.

தல தளபதி: உங்கள நம்பி சந்திப்புக்கு வர பதிவர்களோட கதி?

கேபிள் சங்கர்: அவங்களுக்கு பதிவு போட ஒரு மேட்டர் குடுக்குறோம்ல. "பதிவர் சந்திப்பு புகைப் படங்கள்", செய்திகள்னு எழுதித் தள்ளுறாங்களே.

தல தளபதி: இந்த மாதிரி சந்திப்புகளோட நோக்கம்?

கேபிள் சங்கர்: நாள பின்ன புத்தக வெளியீடு நடத்துறப்ப அத அவங்கக் கிட்டயும் அவங்க நண்பர்கள் கிட்டயும் விக்கறதுக்கு ஈஸியா இருக்கும்.

தல தளபதி: டேய் செம மார்க்கெட்டின் டோய். இவ்வளவு அரசியல் தந்திரம் தெரிஞ்ச நீங்க கட்சி ஆரம்பிச்சி பதிவர்கள மட்டும் ஏமாத்தறத விட்டுட்டு மக்களையும் ஏமாத்தலாமே?

கேபிள் சங்கர்: அதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டிருக்கு. என்னோட முதல் படம் முடிஞ்சதும் அரசியல்ல குதிக்க ப்ளான் பண்ணிருக்கேன்.

தல தளபதி: சூப்பர்ணே! நீங்க எலக்சன்ல நின்னா மொதோ கல்லடி மன்னிக்கனும் மொதோ ஓட்டு நாந்தான் போடுவேன். அப்பறம் தமிழிஸ் தமிழ்மணத்துல போடுறவங்கலாம் போடுவாங்களான்னு கேட்டு வச்சிக்குங்க.

கேபிள் சங்கர்: நன்றி!

தல தளபதி: ம் நன்றிங்க நீங்க போய் எதாவது ஒரு பரோட்டா பதிவு போடுங்க.

பி.கு: வெறும் நகைச்சுவைக்காகத் தான் எழுதிருக்கேன். யாரும் கோவப் பட்டு ஆட்டோ அனுப்பிறாதீங்க. மறக்காம ஓட்டு போட்டு கமெண்ட் போட்டுருக்க.

Saturday, December 11, 2010

60 ஆயிருச்சி தலைவருக்கு! அடுத்த பட ஹீரோயின்!


"60 ஆயிருச்சி மணிவிழா முடிஞ்சிருச்சி ஆனாலும் லவ் ஜோடி தான்" இந்தப் பாடல் தான் இன்னைக்கு மனசுல ஓடுது. காரணமும் இருக்கு. இன்னைக்கு தலைவருக்கு 60வது பிறந்த நாள். உலகம் முழுக்க இன்னைக்கு ரசிகர்கள் கொண்டாடறாங்கப்பா.

எப்புடியாவது ஐஸ்வர்யாராய் கூட நடிக்கனும்னு முயற்சி பண்ணி எந்திரன்ல வெற்றி பெற்றார். 59 க்கு 37 அது ஓகே தான். அதுக்கு முன்ன அவரோட பொண்ணு வயசுல இருக்குற ஸ்ரேயா சிவாஜில ஹீரோயின்.

இப்ப என்னன்னா கௌதம் வாசுதேவன் தலைவர வச்சி அடுத்தப் படம் பண்ணப் போறாராம். திரிஷாவ ஹீரோயினாக்க முயற்சி வேற பண்ணிட்டிருக்காங்களாம்.

இந்த சந்தோசமான செய்தியை தலைவரோட பொறந்தநாள்ல சொல்றதுல நல்லத் தம்பி பெருமை படுறேன். படையப்பால ரம்யா கிருஷ்ணன் சொன்ன மாதிரி தலவா "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் கொறையவே இல்ல!"

60வது பிறந்தநாள் காணும் தலைவனுக்கு தலதளபதி சலூன் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கா மறக்காம ஓட்டு போட்டு கமெண்ட் போடுங்க.

பதிவர்கள் அனைவரும் வருக! வருக!

பதிவர்கள் அனைவரையும் தலதளபதி சலூனுக்கு வருக வருக என வரவேற்கிறேன். இன்று முதல் நம் சலூன் கடை மீண்டும் திறக்கப் படுகிறது. அனைவரும் வருக! ஆதரவு தருக! ஆரம்பமா நம்ம டி.ஆர். இவரு சேவிங் பண்ணனும்னா நம்ம கடைக்குத்தான் வரனும். நீங்களும் வாங்க ஓட்டுப் போட்டு, பின்னூட்டமிட்டு நம்ம கடைக்கு ஆதரவு தாங்க.


காமெடி பீஸப்பா.....

Friday, October 22, 2010

ஜாக்கி சேகருக்கு ஒரு கடிதம்நான் கடந்த 6 மாத காலமாக பதிவுலகின் வாசகனாக இருந்து வருகிறேன். உங்கள் பதிவுகளை பலமுறைப் படித்திருக்கிறேன். திரைத்துரையில் இருப்பதாலோ என்னவோ உங்களுக்கு இந்த கவர்ச்சி (ஆபாசம்) எழுத்திலும் இருக்கிறது என நினைத்துக் கொண்டதுண்டு.

இப்போது நீங்கள் கிழிக்கப் படுவது குறித்து கோபப் பட்டிருக்கிறீர்கள. உங்கள் பதிவில் வெளியிடப்படும் கவர்ச்சிப் படங்களுக்கு நீங்கள் தந்த விளக்கம் இது.

//ஏம்பா தினமும் என் பிளாக்ல்  இது போலான படத்தை டெய்லி கீழ போடறேனே அதை பார்க்கலையா??? அந்த படங்கள் யாரையும் வற்புறுத்தி எடுத்தது அல்ல அவர்கள் அவர்கள்  தொழிலுக்கு கொடுக்கும் புரமோஷன் படங்கள் அவைகள்.//

அவங்க புரோமசன் பண்றதாவே இருக்கட்டும். அதை ஏன் உங்க வ்லைப்பூவுல போடுறீங்க? விபச்சாரிங்க கூடத்தான் தொழிலுக்காக போஸ் கொடுக்குறாங்க. அதுக்கும் இதுக்கும் என்ன வித்யாசம். அதை போட்டு புரமோட் பண்ணுற உங்களுக்கு என்ன பெயர்?

//ஆனால் இரண்டு  வருடம் கடந்த இப்போது என் மீது கற்கள் வீசபடுகின்றன... எனது உருவம் கேலிக்குள்ளாக்க படுகின்றது...நான் வெளிப்படையாக எனது எழுத்து பிழைகளை ஒத்துக்கொண்ட பிறகும் எனது எழுத்து பிழை நையான்டி செய்யபடுகின்றது... எனது 730 பாலோயர்கள் கேலிக்கு உள்ளாக்கபடுகின்றார்கள்...//

உங்களைத் தாக்கி எழுதப் பட்ட பதிவுகளில் இந்த விடயங்களை நானும் கவனித்தேன். ஆனால் அவர்கள் உங்களைத் தாக்கி எழுதிய காரணம் உங்கள் எழுத்தில் கலக்கும் ஆபாசம். அது பற்றி எதுவும் பேசாமல் இந்த கேலிகளை வைத்து ஆதரவு தேடப் பார்க்கிறீர்கள்.

அப்புறம் ஒரு கேள்வி இந்த ஆபாசங்கள் உங்கள் பதிவுகளில் வேண்டுமென்றே திணிக்கப் படுபவையா? அல்லது அதுவாகவே வந்து விடுகிறதா? கடந்து போகும் பெண்களின் அங்கங்களை உங்கள் தளத்தில் விவரிக்கும் நீங்கள் உங்கள் உருவம் கேலி செய்யப் படுவது குறித்து வருத்தப் படுவது வேடிக்கையாக இருக்கிறது.

பி.கு: தலையில முடியே இல்லைன்னாலும் கடைக்கு வர கஸ்டமர்டா அவுரு. அவுருக்கு போயி இப்புடி ஒரு லெட்டர எழுதிட்டியேடா!

Wednesday, October 20, 2010

தல தளபதி சலூன் இனிதே ஆரம்பம்


இது வரை வாசகனாக மட்டுமே இருந்து வந்த நான் இந்த வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறேன். என்ன எழுதப்போறேன்னுலாம் கேக்காதீங்க. என்ன வேணாலும் எழுதுவேன்.

நம்ம சலூன் கடைக்கு இன்னைக்கு தான் திறப்பு விழா! வலையுலக நண்பர்கள், தல, தளபதி ரசிகர்கள் அனைவரும் வருகை தந்து தங்கள் ஆதரவை நல்குமாறு அன்புடன் கோருகிறேன்.

"டி.ஆர் சேவ் பண்ணனும்னு முடிவு பண்ணா நம்ம கடைக்குத்தான் வரனும்".

நாளை முதல் முடி வெட்டப்படும்.

பி.கு: திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவருக்கும் ஒரு ஃபாலோயர் இலவசம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.