Saturday, December 11, 2010

60 ஆயிருச்சி தலைவருக்கு! அடுத்த பட ஹீரோயின்!


"60 ஆயிருச்சி மணிவிழா முடிஞ்சிருச்சி ஆனாலும் லவ் ஜோடி தான்" இந்தப் பாடல் தான் இன்னைக்கு மனசுல ஓடுது. காரணமும் இருக்கு. இன்னைக்கு தலைவருக்கு 60வது பிறந்த நாள். உலகம் முழுக்க இன்னைக்கு ரசிகர்கள் கொண்டாடறாங்கப்பா.

எப்புடியாவது ஐஸ்வர்யாராய் கூட நடிக்கனும்னு முயற்சி பண்ணி எந்திரன்ல வெற்றி பெற்றார். 59 க்கு 37 அது ஓகே தான். அதுக்கு முன்ன அவரோட பொண்ணு வயசுல இருக்குற ஸ்ரேயா சிவாஜில ஹீரோயின்.

இப்ப என்னன்னா கௌதம் வாசுதேவன் தலைவர வச்சி அடுத்தப் படம் பண்ணப் போறாராம். திரிஷாவ ஹீரோயினாக்க முயற்சி வேற பண்ணிட்டிருக்காங்களாம்.

இந்த சந்தோசமான செய்தியை தலைவரோட பொறந்தநாள்ல சொல்றதுல நல்லத் தம்பி பெருமை படுறேன். படையப்பால ரம்யா கிருஷ்ணன் சொன்ன மாதிரி தலவா "வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் கொறையவே இல்ல!"

60வது பிறந்தநாள் காணும் தலைவனுக்கு தலதளபதி சலூன் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கா மறக்காம ஓட்டு போட்டு கமெண்ட் போடுங்க.

6 comments:

சாமக்கோடங்கி said...

61வது பிறந்த நாள்னு கேள்விப் பட்டேன்..

குழப்பத்தை அதிகமாக்கும் சங்கம் said...

அட இதுலயும் சந்தேகமா? குழப்பத்த சரி பன்னுப்பா தலதலபதி

விக்கி உலகம் said...

ஏம்பா ஏன் ஆர்யா படத்த போட்டு உங்க ப்ளோக்க நீங்களே.........

ப்ளீஸ் மாத்திடுங்க

தல தளபதி said...

//சாமக்கோடங்கி said...
61வது பிறந்த நாள்னு கேள்விப் பட்டேன்..
//

60 முடிஞ்சிருக்குங்க....

தல தளபதி said...

//விக்கி உலகம் said...
ஏம்பா ஏன் ஆர்யா படத்த போட்டு உங்க ப்ளோக்க நீங்களே.........//

மாத்தியாச்சு! மாத்தியாச்சு!

விக்கி உலகம் said...

மாத்தியாச்சு! மாத்தியாச்சு!

நன்றி

Post a Comment