Friday, December 24, 2010

கேபிள் சங்கரும் தல தளபதியும்பதிவுலக யூத்து, புலமைப் பித்தன், எதிர்கால இயக்குனர் கேபிள் சங்கருடன் ஒரு பேட்டி.

தல தளபதி: வணக்கம் மக்கா! ஒரு வெட்டியான விவாத நிகழ்ச்சிக்கு வேல வெட்டியெல்லாம் விட்டுப் போட்டு கேபிள் சங்கர் இங்க வந்துருக்காரு (பதிவெழுதுறதெல்லாம் ஒரு வேலையா?). வாங்க கேபிள் சங்கர். அதென்ன கேபிள் சங்கர்? கனக்சன் குடுத்தாதான் பேசுவீங்களா?

கேபிள் சங்கர்: நான் சைதாப்பேட்டையில கேபிள் டி.வி ஓனர்.

தல தளபதி: ஆமாம் பெரிய ரிலையன்ஸ் ஓனர். மக்கிப் போன ஒயர மாத்தாம, கேபிள் தெரியலன்னா கண்டுக்காம மாசா மாசம் பணத்த மட்டும் புடுங்கற வேலைக்கு ஓனர்னு பேரு வேற.

கேபிள் சங்கர்: அதெல்லாம் இந்த சன் டேரக்ட் மாதிரி ஆளுங்க செஞ்ச குளோபல் மார்க்கெட்டிங்கால வந்த பிரச்சினை. அவங்களால எங்க பிஸினஸ் பாதிச்சிருச்சி.

தல தளபதி: யோவ் சினிமாவ மட்டும் எப்புடி மார்க்கெட்டிங் செய்யறது, செஞ்சாங்கன்னு சொல்லி "சினிமா வியாபம்" பண்ற நீ மார்க்கெட்டிங்க தப்பாப் பேசுறியா? சரி நீங்க பதிவெழுதுறதோட நோக்கம் என்ன?

கேபிள் சங்கர்: மக்களுக்கு திரைப் படங்களைப் பத்தி ஒரு புரிதல் ஏற்படுத்தி இந்தியாவ முன்னேத்தனும்.

தல தளபதி: ஓ சினிமா பத்திப் புரிதல் வந்தா இந்தியா முன்னேறிடுமா? என்னா ஒரு கண்டு பிடிப்பு. நீங்க ஒரு வில்லேஜ் விஞானி பாஸ்.

கேபிள் சங்கர்: ராத்திரி பகலா ஷீட்டிங் போகுது. அந்த பிஸியிலயும் நான் இங்க வந்துருக்கேன். கேள்வியக் கேளுங்க.

தல தளபதி: நீங்க நெறையா சாப்புடுவீங்களா?

கேபிள் சங்கர்: ஏன் என்னையப் பாத்தாத் தெரியலையா உங்களுக்கு?

தல தளபதி. ம் நல்லா தெரியுதுண்ணே! இல்ல நீங்க எழுதுற சாப்பாட்டுக் கடை விளம்பரம்லாம் காச வாங்கிட்டு எழுதுறீங்கன்னு பேசிக்கிறாங்களே!

கேபிள் சங்கர்: அது யாரோ விஷமிகள் கெளப்பிவிட்ட வதந்தி.

தல தளபதி: யோவ் வதந்தியும் இல்ல வாந்தியும் இல்ல. நீ சொன்னன்னு சொல்லி திருவான்மியூர்ல ஒரு கடைல போய் சாப்பிட்டேன். சரக்கடிச்ச மாதிரி ரெண்டு நாளைக்கு மப்பு தெளியிலய்யா.

கேபிள் சங்கர்:தம்பி அதப் பத்தி நாம பேட்டி முடிஞ்சதுக்கப்பறம் பேசிக்குவோம். அடுத்தக் கேள்வி?

தல தளபதி: நீங்க பதிவர் சந்திப்பு புத்தக வெளியீடெல்லாம் நடத்துறதே ஒன்னா சேந்து சரக்கடிக்கத்தான்னு ஊருக்குள்ளப் பேசிக்கிறாங்களே! அது உண்மையா?

கேபிள் சங்கர்: உங்களுக்கு யாரோ தப்பான தகவல் குடுத்துருக்காங்க. சந்திப்புக்கு வர எல்லாரும் சேந்து அடிக்க மாட்டோம். நாங்க ஒரு நாலு பேர் இருக்கோம். ஒன்னா சேந்து சரக்கடிக்க ப்ளான் பண்ணும் போது ஒரு பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணிருவோம்.

தல தளபதி: உங்கள நம்பி சந்திப்புக்கு வர பதிவர்களோட கதி?

கேபிள் சங்கர்: அவங்களுக்கு பதிவு போட ஒரு மேட்டர் குடுக்குறோம்ல. "பதிவர் சந்திப்பு புகைப் படங்கள்", செய்திகள்னு எழுதித் தள்ளுறாங்களே.

தல தளபதி: இந்த மாதிரி சந்திப்புகளோட நோக்கம்?

கேபிள் சங்கர்: நாள பின்ன புத்தக வெளியீடு நடத்துறப்ப அத அவங்கக் கிட்டயும் அவங்க நண்பர்கள் கிட்டயும் விக்கறதுக்கு ஈஸியா இருக்கும்.

தல தளபதி: டேய் செம மார்க்கெட்டின் டோய். இவ்வளவு அரசியல் தந்திரம் தெரிஞ்ச நீங்க கட்சி ஆரம்பிச்சி பதிவர்கள மட்டும் ஏமாத்தறத விட்டுட்டு மக்களையும் ஏமாத்தலாமே?

கேபிள் சங்கர்: அதுக்கான ஏற்பாடுகள் நடந்துட்டிருக்கு. என்னோட முதல் படம் முடிஞ்சதும் அரசியல்ல குதிக்க ப்ளான் பண்ணிருக்கேன்.

தல தளபதி: சூப்பர்ணே! நீங்க எலக்சன்ல நின்னா மொதோ கல்லடி மன்னிக்கனும் மொதோ ஓட்டு நாந்தான் போடுவேன். அப்பறம் தமிழிஸ் தமிழ்மணத்துல போடுறவங்கலாம் போடுவாங்களான்னு கேட்டு வச்சிக்குங்க.

கேபிள் சங்கர்: நன்றி!

தல தளபதி: ம் நன்றிங்க நீங்க போய் எதாவது ஒரு பரோட்டா பதிவு போடுங்க.

பி.கு: வெறும் நகைச்சுவைக்காகத் தான் எழுதிருக்கேன். யாரும் கோவப் பட்டு ஆட்டோ அனுப்பிறாதீங்க. மறக்காம ஓட்டு போட்டு கமெண்ட் போட்டுருக்க.

7 comments:

இரவு வானம் said...

:-))))))))))))))))))))))))))

philosophy prabhakaran said...

வந்துட்டேன்...

philosophy prabhakaran said...

வந்தடுவனே கேபிள் ஜாக்கின்னு கலக்குறீங்க... விரைவில் பிரபலமடைய வாழ்த்துக்கள்...

philosophy prabhakaran said...

remove word verification please...

sanmugakumar007 said...

விரைவில் பிரபலமடைய வாழ்த்துக்கள்...

சரியாக சொன்னிங்க பாஸ்


இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

விக்கி உலகம் said...

பகிர்வுக்கு நன்றி.

கலக்குங்க

Cable Sankar said...

நைஸ்.. அண்ட் இண்ட்ரஸ்டிங்.. கலாய்ப்பும், நகைச்சுவையும்..

Post a Comment